

நகர்ப்புற வாழ்க்கையைப் போன்றது அல்ல கிராமப்புற வாழ்க்கை. கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்வியலும் அவர்கள் பின்பற்றும் விழுமியங்களும் முற்றிலும் வேறுப்பட்டவை. இதைத்தான் கரிசல் மண்ணான கோல்வார்ப்பட்டி என்கிற கிராமத்தின் பின்னணியில் ‘தே’ என்ற நாவலாக எழுதியிருக்கிறார், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி.முருகன்.
சாத்தூருக்கு அருகே உள்ள கோல்வார்ப்பட்டியின் மண், மனிதன், சாதியம் என அனைத்தும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மழையை மட்டுமே நம்பி வாழும் கரிசல் பிரதேச மக்களின் விவசாயம், சிறு தெய்வ வழிபாடு, கிராமத்து கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.