

ஒரு விசயத்தில் ஒன்றுமில்லை என்பதை குறிப்பிடுவதற்காக உப்புச் சப்பு இல்லாத விசயம் என்ற பேச்சு வழக்கை கேட்டிருப்போம். ஆனால் உப்பில் எத்தனை விசயம் இருக்கிறது என்பதை சுவைபட சொல்கிறது உப்பும் சமூக மதிப்பு மாற்றமும் நூல். உப்புக்குத்தான் எத்தனைப் பெயர்கள். ஓராயிரம் விளக்கத்துடன் ஆதாரங்களுடன் உழைப்பை செலுத்தி உப்பை தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உப்பை எடுத்தாண்டதன் மூலம் தமிழ் பாடமும், உப்பு தயாரித்தலின் படிநிலைகள் குறித்த விளக்கத்தில் அறிவியல் பாடமும் விடுதலைப் போராட்டம் (சத்யாகிஹக பாடல்களோடு), உப்புச் சட்டம், வரிவிதிப்பு என சமூக அறிவியல் பாடமும், உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாவும், தேசிய அளவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகமும் இருப்பதை விளக்கியதன் மூலம் வணிகவியல் பாடமும் என ஒரு விரிவான பாடநூலைப்போல இந்நூல் வெளிவந்துள்ளது.