பின்னிச்செல்லும் காட்டுக்கொடிகள் | நூல் நயம்

பின்னிச்செல்லும் காட்டுக்கொடிகள் | நூல் நயம்
Updated on
1 min read

2021இல் சாகித்ய அகாதெமி யுவபுரஸ்​கார் விருதுபெற்ற நாவலின் தமிழாக்​கம் இது. ஆல்ப்ஸ் மலைத்​தொடரை ஒட்​டிய கார்​ணோ​வியா கற்​பனை நகரம். அங்கு பூத்​துக்​குலுங்​கும் வயலட்​நிற ஜகரந்தா மலர்​களின் அழகைக் காண சுற்​றுலா​வினர் குவி​கின்​றனர்.

வழி​காட்​டி​யான அகஸ்​டானா அவர்​களுக்​குச் சொல்​லும் காதல் கதைகளி​லிருந்து அற்​புத​மான ஒரு கனவு உலகத்தை திறந்​து​காட்​டு​கிறார் நாவலாசிரியர்.

மேய்ச்​சல்​காரன்றாக்​கியஸை நேசிக்​கும் சிபில்​லா, நோயின் பிடி​யில் விழுந்து மடிகிறாள்​. ஏழைக் காதலனின் நினை​வு​களி​ல் வதைபடும் டைன்​வென் என்​பவள் பிரபு குடும்​பத்​தைச் சேர்ந்​தவள். காதல் நினை​வு​களி​லிருந்து தப்​பிக்க தேவதை​யிட​மிருந்து புனித பானம்​பெற்று அருந்தி சொர்க்​கம் செல்​கிறாள்.

சுற்​றுலாப் பயணி​களுக்கு இந்​தக் கதைகளை சொல்​லிக்​கொண்​டிருக்​கும் அகஸ்​டா​னா, காதலானது இன்​பத்தை மட்​டுமல்ல, துயரத்​தை​யும் பரி​சாகத் தரக்​கூடியது என்​பதை அறி​யாதவனல்ல.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in