சமூக நீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு? | நூல் நயம்

சமூக நீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு? | நூல் நயம்
Updated on
1 min read

தேசிய மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பில் சாதி​வாரிக் கணக்​கெடுப்​பைச் சேர்க்​கப்​போவ​தாக மத்​திய அரசு அறி​வித்​திருக்​கும் நிலை​யில் சாதி​வாரிக் கணக்​கெடுப்​பின் அரசி​யல் குறித்து வரலாற்​றுத் தரவு​களு​டன் ஆவணப்​படுத்​தி​யுள்​ளார் ஆனந்த் டெல்​டும்​டே.

பேராசிரியரும் மனித உரிமை​கள் செயல்​பாட்​டாள​ரு​மான ஆனந்த் டெல்​டும்​டே, சாதி​வாரிக் கணக்​கெடுப்​பின் உண்​மை​யான நோக்​கம் என்ன எனக் கேள்​வியெழுப்​பு​கிறார்.

இடஒதுக்​கீட்​டுக்​காக மட்​டுமே இந்​தக் கணக்​கெடுப்பு பயன்​படு​கிற​தா, ‘சமூக நீதி’ என்​கிற போர்​வை​யால் சாதி​களின் இருப்பு உறு​தி​செய்​யப்​படு​கிறதா என்​ப​தை​யும் இந்​நூலில் இவர் ஆராய்​கிறார்.

இந்​தி​யா​வில் சாதி​கள் எப்​படிப் புகுத்​தப்​பட்​டுக் காலந்​தோறும் ஆள்​வோ​ரால் நிலைநிறுத்​தப்​பட்டன என்​ப​தைச் சான்​றுகளோடு ஆனந்த் டெல்​டும்டே நிறு​வு​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in