

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் புதிய கருத்தோட்டங்களும், அணுகுமுறைகளும் கொண்ட நாடகங்களை உருவாக்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு செறிவான நாடக இயக்கத்தை முன்னெடுத்ததில் பாலேந்திராவின் பங்கு முக்கியமானது.
அவரது நாடகங்கள் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் களமாகவும், தாயகத்தின் பண்பாட்டை நினைவூட்டும் வழிகளாகவும் உருக்கொண்டவை. தற்போது வெளிவந்துள்ள இந்த நாடகத் தொகுப்பு அவருடைய நாடகச் செயல்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பாகவும், சிந்தனையும் செறிவும் கொண்ட ஒரு புதிய நாடக அரங்கை முன்னெடுக்கும் முயற்சி களாகவும் உள்ளன.