

விதைகள் வாசகர் வட்டம் மற்றும் ஸ்ரீ சுந்தர் மஹால் இணைந்து நடத்தும் 9ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா ஜூலை 10ஆம் தேதி தொடங்கியது. சத்தியமங்கலம் திப்புசுல்தான் ரோட்டில் உள்ள ஸ்ரீ சுந்தர் மஹாலில் வரும் 15ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் பல பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.
கருத்துரை, கதை சொல்லல், நூல் வெளியீடு, விருது வழங்குதல் என பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. முதல் நாளில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.விமலா புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து வரும் நாட்களில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, கவிஞர் நா.முத்துநிலவன், திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.