

* சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருந்த வாசகர்கள் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டது, இந்த ஆண்டின் சிறந்த முன்னெடுப்பாகப் பலராலும் பாராட்டப்பட்டது.
* நந்தனம் மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புத்தகக் காட்சி வளாகத்துக்கு இயக்கப்பட்ட மினி பேருந்து சேவை, வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
* புத்தகக் காட்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தபால் துறையின் ஆதார் சேவை மையத்தில் எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் கூட்டம் வரிசையில் நின்றதைக் காண முடிந்தது.
* பொழுதுபோக்குக்காக மக்கள் பெருமளவில் கூடும் கடற்கரை போன்ற இடங்களில் அமைக்கப்படும் துரித உணவுக் கடைகளைப் போலவே, இங்கும் துரித உணவு வகைகள் அதிகமாக விற்கப்பட்டன என்றும், அதிக விலைக்கு விற்கப்பட்டன என்றும், எனினும் உணவு வகைகள் போதிய தரத்தில் இல்லை என்றும் வாசகர்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.