

சித்த மருத்துவத்தால் விளையும் நன்மைகளை உணர்த்தும் ‘சித்தாவரம்’ என்னும் முதல் நூலோடு தமிழுலகத்துக்கு அறிமுகமானவர் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன். இப்போது நீரிழிவு நோய் தொடர்பான ‘சர்க்கரை வியூகம்’ என்னும் புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஒரு நோய் உருவாக எண்ணற்ற காரணங்கள் உள்ளன. தண்டவாளங்கள் மீது ஓடும் ரயில் வண்டியைப்போல இந்த எண்ணற்ற கூறுகளின் துணையோடுதான் நம் உடல் சமநிலையுடன் இயங்குகிறது. சமநிலையில் உருவாகும் ஒரு சிறு பிசகு கூட நம்மைக் கீழே வீழ்த்திவிடும்.