அம்பேத்கரைப் பற்றி இதுவரை அறிந்திராத புதிய பரிமாணம்

அம்பேத்கரைப் பற்றி இதுவரை அறிந்திராத புதிய பரிமாணம்

Published on

டாக்​டர் பி.ஆர். அம்​பேத்​கரின் சிந்​தனை மரபை ஒரு புதிய கோணத்​தில் புரிந்​து​கொள்ள ஸ்காட் ஆர். ஸ்டிர​வுட் (Scott R. Stroud) எழு​திய ‘The Evolution of Pragmatism in India: An Intellectual Biography of B.R. Ambedkar’ என்ற நூல் பெரும் உதவி​யாக இருக்​கிறது. பி.ஆர். அம்பேத்கர் ஓர் அரசி​யல் தலை​வர் அல்​லது சட்ட வல்​லுநர் என்​ப​தைத் தாண்​டி, நவீன இந்​தி​யா​வின் அறி​வு​சார் சிற்பி (Intellectual Architect) என்​பதை இந்​நூல் ஆதா​ரங்​களு​டன் நிறு​வு​கிறது.

அம்​பேத்​கர் அமெரிக்​கா​வில் பயின்ற காலம், அவரது சிந்​தனைப் போக்கை வடிவ​மைத்த மிக முக்​கிய​மான கால​கட்​ட​மாகும். குறிப்​பாக, கொலம்​பியா பல்​கலைக்​கழகத்​தில் அவரது பேராசிரிய​ராக இருந்த ஜான் டூயி (John Dewey) என்​பவருக்​கும் அம்​பேத்​கருக்​கும் இடையி​லான அறி​வு​சார் பந்​தம், இந்​திய வரலாற்​றின் போக்​கையே மாற்​றியமைத்த ஒரு தத்​துவ அடித்​தளத்தை உரு​வாக்க பெரும் துணை​யாக நின்​றது.

நவீனக் கல்​வி​யியலின் தந்தை என்று போற்​றப்​படும் ஜான் டூயி, ‘பிரக்​மாடிசம்’ (Pragmatism - நடை​முறை​வாதம்) என்​னும் தத்​து​வத்​தின் முன்​னோடி. டூயி​யின் இந்​தத் தத்​து​வம் அம்​பேத்​கருக்​குள் ஏற்​படுத்​திய தாக்​கம் என்ன, இந்​தி​யச் சூழலுக்கு ஏற்ப அந்​தத் தத்​து​வத்தை அம்​பேத்​கர் எவ்​வாறு தகவ​மைத்து நடை​முறைப்​படுத்​தி​னார் என்​பதை மிக​வும் சுவாரசி​யத்​துடன் இந்​நூல் விவரிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in