

ஒவ்வோர் ஆண்டும் கேதார்நாத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல கேதார்நாத்தில் இயற்கைப் பேரிடர் சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
இயற்கைப் பேரிடர் மனித உயிர்களைக் காவு வாங்குவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் சொத்துகளையும் அழித்துவிடுகிறது.