புதியதொரு மொழிபெயர்ப்பே அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக்கடன் | நூல் வெளி

புதியதொரு மொழிபெயர்ப்பே அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக்கடன் | நூல் வெளி
Updated on
2 min read

முதலமைச்​சர் மு.க.ஸ்​டா​லின் தமிழ்​நாடு சட்​டப்​பேர​வை​யில் 13-04-2022 அன்று ஓர் அறி​விப்பை வெளி​யிட்​டார். “நாடாளு​மன்ற உறுப்​பினர் ஆ.ரா​சா, அண்​ணல் அம்​பேத்​கருடைய தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நூல்​களை தமிழில் வாசிக்க வாய்ப்​பாக மொழி பெயர்த்து புதுப்​பிக்க வேண்​டும் என்ற ஒரு கோரிக்​கையை விடுத்​திருக்​கிறார்.

அந்த கோரிக்கை ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டு, தமிழக அரசால் அண்​ணலுடைய தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நூல்​கள் செம்​ப​திப்​பாக தமிழில் வெளி​யிடப்​படும் என்​பதை மகிழ்ச்​சி​யோடு தெரி​வித்​துக்​கொள்​கிறேன்” என்​பதே அந்த அறி​விப்​பாகும். பாபா​சாஹேப் அம்​பேத்​கரின் ஆங்​கிலப் படைப்​பு​களை புதி​தாய் தமிழில் மொழிபெயர்த்து சிறந்த அச்சுத் தரத்​தில் கெட்டி அட்டை புத்​தகங்​களாக வெளி​யிடப்​படும் என்​பதே முதலமைச்​சர் தனது அறி​விப்​பில் பயன்​படுத்​திய ‘செம்​ப​திப்​பு’ என்ற வார்த்​தைக்​கான அர்த்​த​மாகும். புதிய மொழிபெயர்ப்​பு​களுக்​கான பணி​களை 2024ஆம் ஆண்டு முழு​வதும் உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் மூலம் தமிழ்​நாடு அரசு மேற்​கொண்​டது.

மீண்​டும் மொழிபெயர்ப்பு செய்​வதற்​கான காரணம்: 1992ஆம் ஆண்டு அண்​ணல் அம்​பேத்​கர் அவர்​களின் நூற்​றாண்டை முன்​னிட்டு Dr. Babasaheb Ambedkar Writings and Speeches எனும் ஆங்​கில நூல் தொகு​தி​களை தமிழ், இந்தி உட்பட ஏனைய இந்​திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளி​யிடும் பணியை மத்​திய அரசு தொடங்​கியது. 16 ஆங்​கில தொகு​தி​கள் தமிழில் மொழிபெயர்க்​கப்​பட்டு 37 தொகு​தி​களாக வெளி​யிடப்​பட்​டன.

மத்​திய அரசின் புத்தக வெளி​யீட்​டுப் பிரிவு இதன் வெளி​யீட்​டாள​ராக தொடக்​கத்​தில் இருந்​தது. அதனை தொடர்ந்து டாக்​டர் அம்​பேத்​கர் பவுண்​டேஷன் இத்​தொகு​தி​களை பதிப்​பித்து வெளி​யிட்​டது. இம்​மொழிபெயர்ப்பு திட்​டத்​தில் பணி​யாற்​றிய அனை​வருக்​கு​மான ஊதி​யத்தை மத்​திய அரசு வழங்​கியது. எனினும், இத்​தொகு​தி​கள் தமிழில் சரிவர மொழிபெயர்க்​கப்​ப​டாத​தால் அம்​பேத்​கரி​யம் பரவிட இத்​தொகு​தி​களே தடைக்​கற்​களாக மாறின. புரிதல்​களும் குழப்​பங்​களும் பிணைந்​தன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in