

ரகுநாத்.வ, ஹைக்கூ மற்றும் குறுங்கவிதைகளில் கவிஞராக வெளிப்படுத்திக் கொண்டவர். தற்போது, நவீன கவிதைகளில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
‘அன்புத் தசையின் பெருமா’ அவருடைய 4-வது தொகுப்பு. காணும் காட்சிகளிலுள்ள படிமங்களை, புதிய காட்சியாக்கும் வித்தையை தெரிந்த இவர், தனது ஒரு ஹைக்கூவில், ஆலமரத்தின் நிழலை / அசைத்துவிட்டு ஓடுகின்றன / அணில்கள் என்றும், இன்னொரு ஹைக்கூவில், குளத்தில் குதித்த தவளை / கரையில் விழுகிறது / இன்னொரு நிலா என்றும் எழுதுகிறார்.
தலைமுறை மாற்றங்களைப் பேசும் ஒரு கவிதையில், விழுதுகளைப் பற்றியிருக்கிற / ஆலமரத்தோடு / முதியோர் இல்லம் என்ற சொற்களில் நிதர்சனம் வலிக்கிறது.
‘அன்புத் தசையின் பெருமா’ தொகுப்பில் மரம் பற்றிய, ‘இயலாமை’ என்றொரு கவிதை.
அதில், ‘வந்தமரும் பறவைக்கு மடிவிரிக்கிறது, வண்ணத்துப் பூச்சிக்கு தேனூட்டுகிறது, இல்லம்தேடும் சிட்டுக்கு கூடாகிறது, ஓடிவரும் அணிலுக்கு கை நீட்டுகிறது’ என்றெல்லாம் கூறிவிட்டு கடைசியில், இப்படி முடிக்கிறார், ‘தன்னிலிருந்து உதிரும் பூவை ஏந்தவியலாமையில் மட்டுமே, ஒட்டுமொத்த மரமும் தலைகவிழ்கிறது!’ என்று. இக்கற்பனை நம்மை புதியதாக யோசிக்க வைக்கிறது. - சக்ராவதி
அன்புத் தசையின் பெருமா
மெய்நிழல்
விலை: ரூ.140/-
தொடர்புக்கு: 9092858529