

இன்று மனித குலத்தின் திசை வழியை மாற்றும் நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி அதிகம் பேசப்படுகிறது. இதன் பயன்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதையும் காண முடிகிறது.
இத்துறையைப் பற்றி அதிகம் விவாதிக்கப்படும் நிலையில், அதைப் பற்றிய நூல்களும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மறைமலை இலக்குவனார் எழுதிய ‘செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்’ என்கிற நூல் கவனம் பெறுகிறது.
இந்த நூலை 5 பகுதிகளாகப் பிரித்து ஆசிரியர் எழுதியிருக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் வகைகள், மாடல்கள், பயன்பாடுகள் என ஒவ்வொன்றாகப் பிரித்து நன்கு புரியும்படி எழுதப்பட்டுள்ளது.