

கவிஞர் மீரா கவிதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற ஓர் ஆய்வாளரின் கவிதைத் தொகுப்பு இது. எள்ளலும் சமூகப் பார்வையும் மிக்க மீராவின் தாக்கத்தையா.சாம்ராஜின் கவிதைகளில் காண முடிகிறது.
‘நன்றி வாக்காளர்களே’ என்ற கவிதையில், ‘மனிதத்தைத் தவிர்த்து சாதியையும் மதத்தையும் கொண்டே கூட்டணிகள் கொக்கரிக்கும்’ என தேர்தல் களங்களை எள்ளி நகையாடுகிறார்.