

உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள் பலர் தங்களின் முதல் முயற்சியில் வெற்றி கண்டவர்கள் அல்லர். ஆபிரகாம் லிங்கன் பல தோல்விகளைச் சுமந்து பின்னாளில் அமெரிக்க அதிபராக உயர்ந்தெழுந்தார்.
பூமி தட்டை வடிவில் இல்லை; அது உருண்டை; அது சூரியனைச் சுற்றுகிறது என கலிலியோ சொன்னபோது சமூகம் அவரை எதிர்த்து சிறையில் அடைத்தது. ஆனாலும், அவர் அறிவியல் உண்மையில் இருந்து பின்வாங்கவில்லை.
இதுபோன்ற விஷயங்களை ஒற்றை வரியில் சொன்னால் பொன்மொழிக்கு உதவுமே தவிர வாழ்க்கைக்கு உதவாது. அதுவே அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்புமுனை சம்பவங்களைத் தத்ரூபமாக விவரிக்கும்போது வாசகரின் மனதில் பசுமரத்து ஆணிபோல் ஆழப் பதியும்.