

நம் உடல் நலம் காக்கும் ஆரோக்கியமான உணவுகளை இந்நூலில் டாக்டர் விக்ரம்குமார் பட்டியலிட்டுள்ளார். பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழல் காரணமாக உடல் நலம் பராமரிப்பு என்பது பெரும் சவாலானதாக மாறியுள்ளது. சிறு வயதுக்காரர்கள் கூட பெரும் நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருவதைப் பார்த்து வருகிறோம்.
‘நலமோடு வாழ்தல்’ என்பது இயல்பாக இருந்த நிலை மாறிவிட்டது. இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போல உடல் நலம் காக்க நாம் நிச்சயமாக நேரம் ஒதுக்கி, சற்று மெனக்கெடு செய்தால்தான் நல்வாழ்வை உறுதிப்படுத்த முடியும்.