

பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்துவின் சிந்தனைகள், கருத்துரைகள் ‘ஆனைமுத்து 100’ என்ற தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. ‘ஆனைமுத்து நூற்றாண்டுக்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிந்தனையாளன்’ இதழாசிரியர் இரா.பச்சமலை இந்நூலை தொகுத்தளித்துள்ளார்.
1925இல் பிறந்த வே.ஆனைமுத்து, 1974இல் சிந்தனையாளன் பத்திரிகையைத் தொடங்கி, ஆசிரியராக 50 ஆண்டுகாலம் நடத்திவந்தார். ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியை 1976இல் தொடங்கினார்.