

தமிழ்ப் பேராசிரியரும் நாட்டார் வழக்காற்றியலில் அறிஞருமான பழனி கிருஷ்ணசாமி எழுதிய 14 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் ‘தன்னனானே’ என்னும் இதழில் வெளியானவை.
ஹேம்பர்க்கரும் குழிப்பணியாரமும்: நாட்டார் வழக்காற்றியல் கட்டுரைக
பழனி கிருஷ்ணசாமி
காவ்யா, விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 23726882, 9840480232
வரலாற்றாசிரியர் செ.திவான் எழுதிவரும் ‘இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள்’ எனும் நூல் வரிசையில் முஹம்மத் ஷேர் அலி, அஷ்பாகுல்லாகான் ஆகிய இருவரின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு குறித்த சிறு நூல் இது.
சுதந்திரச் சிங்கங்கள்
செ.திவான்
நியூஸ்மேன் புக் பிரிண்டர்ஸ், மதுரை
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9080330200, 0452-4396667
எழுத்தாளரும் ‘நவீன விருட்சம்’ என்னும் காலாண்டிதழை நடத்திவருபவருமான அழகியசிங்கர் 2021, 2022களில் எழுதிய 100 கவிதைகளின் தொகுப்பு.
வெற்றிடம் எதற்கு?
வெற்றிடம் எதற்கு?
அழகியசிங்கர்
விருட்சம், சென்னை
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9444113205, 9176613205
‘ராணி’ வார இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. காதலனால் கைவிடப்பட்டுக் கணவனாலும் ஏமாற்றப்பட்ட பெண்ணை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு தாமரை செந்தூர்பாண்டி இந்நூலை எழுதியிருக்கிறார்.
கண் வரைந்த ஓவியம்
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 8838477377, 9551648732
ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான இதில் 12 கதைகள் இடம்பெற்றுள்ளன. வாழ்வில் அன்றாடம் எதிர்ப்படும் மனிதர்களை முன்வைத்து நேரடியான மொழியில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆதிராவின் மொழி
சிவமணி
கேலக்ஸி புக் செல்லர்ஸ் & பப்ளிஷர்ஸ், மேலூர், விலை: ரூ.180
தொடர்புக்கு: 9994434432