

மூத்த மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் புதிய நாவல் ‘நிங்கள்’ (நீங்கள்) வெளியாகியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான மாஹேயில் பிறந்தவர் முகுந்தன். இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு பிரெஞ்சுக் காலனியான மாஹேயில் ஏற்பட்ட புரட்சியையும் மாற்றங்களையும் சொல்லும் நாவலான ‘மய்யழிப் புழயுட தீரங்களில்’ (மய்யழி என்பது மாஹேயின் மலையாளப் பெயர்) என்கிற நாவல் எம்.முகுந்தனின் பிரபலமான நாவல்.
இதன் தொடர்ச்சிபோல மாஹேயில் தங்கிவிட்ட ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தின் சிதைவைச் சித்தரித்த வகையில் கவனம்பெற்ற நாவல், ‘தெய்வத்திண்ட விகுருதிகள்’. 2017இல் ‘நிர்த்தம் செய்யுன்ன குடைகள்’ வெளிவந்தது. ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் இந்த நாவல், மலையாள வாசகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுபது வயதுள்ள ஒருவர்தான் ‘நிங்கள்’. அப்பாவிடமும் ஆசிரியரிடமும் அடி வாங்கி, பி.ஏ. தேர்ச்சி பெற்று, ஒரு திரையரங்கில் மேலாளர் ஆகிறார். அவருக்கு எழுத்தாளராக விருப்பம். அதனால் 30 வருடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்கிறார் என்று போகிறது அந்த நாவல். - ஜெய்
நிங்கள்
எம்.முகுந்தன்
டிசி புக்ஸ்
விலை: ரூ.359