நூல் வரிசை: அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?

நூல் வரிசை: அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?
Updated on
2 min read

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் நூலாசிரியர், சிறந்ததென்று போற்றப்படும் அமெரிக்க ஜனநாயகம் குறித்த மாற்றுப் பார்வையை சமகால அமெரிக்க அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் முன்வைத்திருக்கிறார்.

அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?
நாகேஸ்வரி அண்ணாமலை

அடையாளம் வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 04332 273444, 94447 72686

நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தவரான வைரவன், தான் பிறந்து வளர்ந்த பகுதியின் சித்திரங்களையும் காலமாற்றத்தால் மாறிய மனித இயல்புகளையும் கதைகளில் பதிவுசெய்துள்ளார்.

ராம மந்திரம் & பிற கதைகள்
வைரவன் லெ.ரா

யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 90424 61472, 98416 43380

தமிழ்ச் செய்யுள் மீதான ஆர்வத்தால் பள்ளிப் பருவத்தி லிருந்தே கவிதை எழுதத் தொடங்கிவிட்ட செ.ரா.கிருஷ்ண குமாரியின் முதல் கவிதைத் தொகுப்பு.

நிலவொளியும்
உன் நினைவுகளும்
செ.ரா.கிருஷ்ணகுமாரி

கவிஓவியா பதிப்பகம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 98409 12010

பேராசிரியர் சூ.அ.செல்வநாதன் எழுதிய 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எளிய மனிதர்களைப் பற்றி எழுதப்பட்ட கதைகள் இவை.

மூன்றாம் பால்
சூ.அ.செல்வநாதன்

தொன் போஸ்கோ பதிப்பகம், சென்னை
விலை: ரூ.100
தொடர்புக்கு: 94441 95296, 97910 91763

யோகீசுவரன் எழுதியுள்ள இந்த நாவல், எளிய மக்கள் புதிய சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு ஆற்றக்கூடிய பங்களிப்பைப் பற்றிப் பேசுகிறது.

ஒரு சித்தாள் சிம்மாசனம் ஏறினாள்
பேராசிரியர் பி.யோகீசுவரன்

நீலா பதிப்பகம்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 94456 18541

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in