Published : 02 Sep 2017 09:46 AM
Last Updated : 02 Sep 2017 09:46 AM

நூல் நோக்கு: பலவீனமே, பலம்!

பை

பிள் கதையான டேவிட்டும் கோலியாத்தும் பெரும்பாலானவர்களுக்கு நன்கு அறிமுகமானதுதான். கூடைப்பந்து விளையாட்டுக்குச் சிறிதும் பொருத்தமானவர்கள் அல்ல என்று நினைக்கப்படும் சிறுமிகளை, கூடைப்பந்தாட்டத்தில் கொஞ்சமும் பயிற்சியே இல்லாத ஒருவர் எப்படிச் சிறந்த அணியாக உருவாக்கினார் என்ற முன்னுதாரணக் கதையோடு தொடங்குகிறது புத்தகம். நம்முடைய மனதில் வழக்கமாகப் பதிந்திருக்கும் பிம்பங்களை உடைத்து, உளவியல்ரீதியாக நம்மைப் பலப்படுத்திக்கொள்ள இப்புத்தகம் நிச்சயம் வழிகாட்டுகிறது. இதில் வரும் சம்பவங்கள், பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறவர்கள் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறுவது எப்படி என்று விளக்குகிறது. வட அயர்லாந்தின் இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை, கொலை - கொலைக்குப் பழிதீர்த்தல், வெற்றிபெற்ற வகுப்பறைகளின் இயக்கவியல் என்று பலவற்றைச் சுட்டிக்காட்டி, நாம் எதெல்லாம் வளர்ச்சிக்குத் தடை என்று கருதுகிறோமோ அவைதான் வெற்றிக்கு உதவுகின்றன என்கிறார். வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், உலக நடப்புகளை மாற்றுக் கோணத்தில் தருகிறார் ஆசிரியர்.

- சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x