

சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கல்லூரியில், தமிழ்த் துறை பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுதிய புதுக் கவிதைகளின் தொகுப்பு. நிறைய மாணவிகள் இந்தக் கவிதைகளில் தமது பிரச்சினைகளைத் துணிச்சலுடன் பதிவுசெய்திருக்கிறார்கள்.
பொதும்பர் - மாணவர்களின் கவிதைகள்
தொகுப்பாசிரியர் - சு.இரமேஷ்
தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி, பட்டாபிராம்
விலை: ரூ.52/-
தொடர்புக்கு: 044-2685 0887
ஆஸ்திரிய-யூத எழுத்தாளர் ஜோசப் ரோத் ஜெர்மன் மொழியில் எழுதிய நாவல் ‘தி லெஜெண்ட் ஆஃப் தி ஹோலி ட்ரிங்கர்’. மைக்கேல் ஹாப்மேன் ஆங்கில மொழிபெயர்ப்பின் வழியாக இது தமிழுக்கு வந்துள்ளது.
புனிதமான குடிகாரன்
ஜோசப் ரோத்
தமிழில்: ராம் முரளி
தமிழ்வெளி, சென்னை
விலை: ரூ.120
தொடர்புக்கு: 90940 05600
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான பரமசிவம் எழுதிய 16 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
செல்ல மகன்
சோ.பரமசிவம்
நியூஸ்மேன் பிரிண்டர்ஸ். மதுரை
விலை: ரூ.120
தொடர்புக்கு:
9080330200, 0452-4396667
நாவல்கள், புதுக் கவிதைகள். சிறுகதைகளை எழுதிவரும் நூலாசிரியர், இந்த நாவலில் மது விற்பனையால் ஏழைக் குடும்பங்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகளைப் பதிவுசெய்திருக்கிறார்.
கீழேயும் ஒரு வானம்
போந்தூர் கனகசுந்தரம்
கனவுத்தமிழ் பதிப்பகம், சென்னை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 84895 86336
மகாகவி பாரதியாரின் சிந்துப் பாடல்கள் குறித்து இந்நூலில் ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். பாரதியை ‘சிந்துக்குத் தந்தை’ என்று விளித்த பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் மூலமாக பாரதியின் சிறப்புகளை எடுத்தியம்பியுள்ளார்.
சிந்துக்குத் தந்தை
முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
காவ்யா, சென்னை
விலை: ரூ.260
தொடர்புக்கு: 044-2372 6882, 98404 80232