நூல் வரிசை: இஸ்லாம் பற்றி பெரியார்

நூல் வரிசை: இஸ்லாம் பற்றி பெரியார்
Updated on
2 min read

இறை மறுப்பாளரான தந்தை பெரியார் இஸ்லாம் மதம் குறித்து வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்திய கருத்துகள் அனைத் தையும் தொகுத்தளித்து இஸ்லாம் குறித்த பெரியாரின் பார்வையைத் தெளிவுபடுத்த முயன்றுள்ளது இந்நூல்.

இஸ்லாம் பற்றி பெரியார்
பதிப்பாசிரியர்: எம்.பி.ராமச்சந்திரன்

சீர்மை, சென்னை
விலை: ரூ.260
தொடர்புக்கு: 80721 23326

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு 33 காட்சிகள் கொண்ட நாடகமாக எழுதப்பட்டுள்ளது.

குலம் (அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நாடகம்)
முகிலை இராச பாண்டியன்

முக்கடல், சென்னை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94443 65642

கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு நெல்லைக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டையின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் நூல்.

வரலாற்றில் பாளையங்கோட்டை
செ.திவான்

ரெகான் - ரெய்யா பதிப்பகம், பாளையங்கோட்டை
விலை: ரூ.50
தொடர்புக்கு: 90803 30200

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள பழனித்துரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ள பத்து கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

எங்கள் நகரம் எங்கள் ஆட்சி - நகர்ப்புற உள்ளாட்சிக்கு ஓர் அறிமுகம்
க.பழனித்துரை

அடையாளம், புத்தாநத்தம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 04332 273444, 94447 72686

கோயிலில் நாகஸ்வரம் வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட நாவல்.

உறவின் ராகங்கள் - இதயங்களின் நாத சுரம்
எஸ்.கே.சண்முகநாதன்

எஸ்டிலோ புக்ஸ்,
சென்னை
விலை: ரூ.355
தொடர்புக்கு: 63834 95575

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in