

ஜெர்மனியில் கலோன் பல்கலைக்கழகத்தில் (University Of Cologne) ஏப்ரல் 17 முதல் 23 வரை நடைபெற இருக்கும் எட்டாவது உலக இலக்கியத் திருவிழாவில் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி கலந்துகொள்கிறார். சர்வதேச அளவில் நடைபெறும் இந்த விழாவில் உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கவிஞர்களுள் சுகிர்தராணியும் ஒருவர்.
தீபச்செல்வனின் புதிய நாவல்: ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘நடுகல்’, ‘பயங்கரவாதி’ ஆகிய இரு நாவல்கள் பெரிதும் பேசப்பட்டவை. அதைத் தொடர்ந்து தனது மூன்றாவது நாவலின் அறிவிப்பைச் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
‘கண்காள் காண்மின்களோ - கடல்/நஞ்சுண்ட கண்டன்றன்னை/எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்/கண்காள் காண்மின்களோ’ என்கிற திருநாவுக்கரசரின் வரிகளைப் பகிர்ந்து ‘சைனைட்’ என நாவலின் தலைப்பை வெளியிட்டுள்ளார்.