

எழுத்தாளர், விமர்சகர் க.நா.சுப்ரமணியம் பற்றியும் அவருடைய இலக்கியப் பணிகள் பற்றியும் அசோகமித்திரன், நகுலன், பிரமிள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
க.நா.சு. இலக்கியத்தடம்
தொகுப்பாசிரியர்: ப.கிருஷ்ணசாமி
காவ்யா, சென்னை
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 2372 6882, 98404 80232
அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்ட பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குலத் தலைவன் ஆதன், குல மூத்தோள் நீலி பற்றிய கதை.
ஆதனின் நீலி
சி.வெற்றிவேல்
வானதி பதிப்பகம், சென்னை
விலை: ரூ.125
தொடர்புக்கு: 044-2434 2810, 2431 0769
உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவரான பிரேம்குமார் அசோகன் எழுதிய 17 சுயமுன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு.
‘டார்லிங்’ ஆக மாறுங்கள்
பிரேம்குமார் அசோகன்
மகிழம் மீடியா, சென்னை
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98948 19643
முகலாயப் பேரரசின் ஆறாம் மன்னரான ஔரங்கசீப் மறைவுக்குப் பிந்தைய முகலாய மன்னர்கள் பற்றிய தகவல்களைத் தரும் நூல்.
முகலாய மன்னர்கள் (கி.பி.1707-கி.பி.1857)
செ.திவான்
ரெகான் - ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90803 30200
மூத்த இதழாளர் கா.சு.வேலாயுதன் எழுதி, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் வெளியான யானைகள் குறித்த 30 கட்டுரைகளின் தொகுப்பு.
யானைகளின் வருகை பாகம் 3
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம் வெளியீடு, கோயம்புத்தூர்
விலை: ரூ.270
தொடர்புக்குள்: 99944 98033, 74013 29405