

பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடையது அது.
ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுணுக்கமான கருத்தை இந்நூலில் அனைவருக்கும் எளிதில் புரியும்விதமாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். நூலாசிரியர் அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணர் என்பதால், பணம் ஈட்டுவதையும், ஈட்டியதைச் சேமிப்பதையும் உளவியல்ரீதியாக அவர் அணுகியிருக்கிறார்.
இந்த அணுகுமுறையே பணம் ஈட்டுவது தொடர்பான பிற நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணம் ஈட்டுவதற்குப் பொருளாதார அறிவு மட்டும் போதாது; வாழ்வியல் பாடங்களும் பணம் குறித்த உளவியல் புரிதலும் தேவை என்பதை ஆசிரியர் நமக்கு உணர்த்தியுள்ளார்.
பணம் காய்ச்சி மனம் டாக்டர்.
ஆர். கார்த்திகேயன்
விலை: ரூ. 120
இணையச் சுட்டி:
store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402