

தன்னைக் கவர்ந்த கவிதைகள் குறித்து திண்ணை இணைய இதழில் ‘கவிதையும் ரசனையும்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் அழகிய சிங்கர் எழுதிவரும் கட்டுரைகளின் தொகுப்பு இது.
கவிதையும் ரசனையும் தொகுதி-1
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9444113205, 9176613205
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவங் களை அடிப்படையாகக் கொண்டு சந்தானமூர்த்தி எழுதிய கட்டுரைகள் இவை. இதன் ஆசிரியர் ‘டேனி’ திரைப்பட இயக்குநர்.
ஐந்தாறு வகுப்பறைகளும்
நாலைந்து காக்கைகளும்
சந்தானமூர்த்தி சிதம்பரம்
புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 044 24332924, 94980 62424
கனவுகள், நினைவுகளாக வெளிப்படும் மனித மனத்தின் ஆழ்மன எண்ணங்களை அடையாளம் காட்டும் விதமாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இது நூலாசிரியரின் முதல் புனைவு நூல்.
கல்வெட்டு (உளவியல் மர்ம நாவல்)
கவிஞர் சிற்பி பாமா
சிற்பி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94862 72294, 94878 43294
பொ.ஆ 1000 முதல் பொ.ஆ. 1346 வரை தென்னிந்தியாவில் வலிமை வாய்ந்த அரசாகத் திகழ்ந்த ஹொய்சாளப் பேரரசின் மூன்றாம் வல்லாளனின் வாழ்க்கையை அறியத் தரும் நூல்.
திருவண்ணாமலையை ஆண்ட
வல்லாள மகாராஜா வரலாறு
(ஹொய்சாளப் பேரரசன் மூன்றாம் வல்லாளன் வரலாறு)
ஆறு. அண்ணல் கண்டர்
வன்னியர் வரலாற்று ஆய்வு மையம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 93810 39035
அம்மா அப்பாவின் சண்டையில் செய்வதறியாது முத்தமிடுகிறது குழந்தை/ என்பது போன்ற ரசனைமிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ள நூல்.
தேசாந்திரியின் தேநீர்
(ஹைக்கூ கவிதைகள்)
கவின்
இடையன் இடைச்சி நூலகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98412 08152