

எழுத்தாளர் புதுமைப் பித்தனைப் போற்றும் வகையில், ‘நான் புதுமைப்பித்தன்’ என்னும் தலைப்பில் நாடக நிகழ்வு மார்ச் 24 முதல் 28 வரை தினசரி மாலை 6.45 மணிக்கு சென்னை கூத்துப்பட்டறை அரங்கில் நிகழ்த்தப்படவுள்ளது. எழுத்து: எஸ்.ராமகிருஷ்ணன், இயக்கம்: கே.எஸ்.கருணாபிரசாத், ஒளி வடிவமைப்பு: செ.ரவீந்திரன். அரங்க, ஆடை வடிவமைப்பு: ஆழி வெங்கடசேன். தொடர்புக்கு: 8939548469.
விஜயா வாசகர் வட்ட விருதுகள்: விஜயா பதிப்பக வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘ஜெயகாந்தன் விருது’ க.மோகனரங்கனுக்கும், ‘புதுமைப்பித்தன் விருது’ காமுத்துரைக்கும், ‘மீரா விருது’ பொன்முகலிக்கும், ‘சக்தி வை.கோவிந்தன் விருது’ பே.ராஜேந்திரனுக்கும், ‘வானதி திருநாவுக்கரசு’ விருது வீ.ரவிக்கும் வழங்கப்படவுள்ளன.
இளவந்திகை விருது விழா: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பில் இளவந்திகை விருதுகள் வழங்கப்பட்டன. என்.டி.ராஜ்குமார் (சிறந்த கவிதைத் தொகுப்பு), நட.சிவகுமார் (சிறந்த சிறுகதைத் தொகுப்பு), வ.கீதா (சிறந்த பெண்ணெழுத்து), விஜயகுமார் (சிறந்த பௌத்த எழுத்து), விஷ்ணுபுரம் சரவணன் (சிறந்த சிறார் இலக்கியம்), கரன்கார்க்கி (சிறந்த நாவல்), திரைப்பட இயக்குநர் தமிழ் (சிறந்த திரைப்படம்), கலை இயக்குநர் ராமலிங்கம் (சிறந்த கலை ஆளுமை) ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் விருது வழங்கினார்.