

சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதிவரும் நூலாசிரியரின் ஆறாவது நாவல் இது. தமிழ் படிக்கும் இளை ஞனை முன்வைத்து தாமிரபரணி நதிக்கரை வாழ்க்கையைப் பதிவுசெய்கிறது.
பொருநை
சுந்தரபாண்டியன்
காவ்யா, சென்னை
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 2372 6882 / 98404 80232
கடைசி வரியில் மூன்று சொற்களுடன் நான்கு வரிகளில் எழுதப்படும் என்பா எனும் புதிய கவிதை வகைமையின் கீழ் கவிஞர் ஹரணி எழுதிய 110 கவிதைகளின் தொகுப்பு இது.
என்பா 110
ஹரணி
விருட்சம், சென்னை
விலை: ரூ.110
தொடர்புக்கு: 94441 13205, 91766 13205
சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவரான கபிலரின் வாழ்வு, படைப்பும் பாடுபொருளும் மொழிநடை ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூல்.
கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்
முனைவர் ந.அறிவரசன்
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 2848 2441, 4215 5309
இந்திய இதிகாசமான மகாபாரதம் குறித்த சந்தேகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் மூல நூலில் உள்ளவற்றின் அடிப்படையில் பதில்களைச் சொல்லும் நூல்.
மகாபாரதம்: மாபெரும் உரையாடல்
ஹரி கிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம், சென்னை
விலை: ரூ.550
தொடர்புக்கு: 81480 66645
2022ஆம் ஆண்டின் குறுநாவல்களுக்கான ஸீரோ டிகிரி இலக்கிய விருதுக்குத் தேர்வான ஆறு குறுநாவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஸீரோ டிகிரி இலக்கிய விருது - 2022: தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்கள்
எழுத்து பிரசுரம்,
சென்னை
விலை: ரூ.680
தொடர்புக்கு: 89250 61999