நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

ஆயுர்வேதத்தின் தோற்றம், முக்கியத்துவம், சிறப்புகளை விவரிக்கும் நூல். மருத்துவ அறிவியலில் பன்னெடுங்காலமாக இந்தியா முன்னோடியாகத் திகழ்ந்து வருவதற்கான வாதங்களையும் இந்நூல் முன்வைக்கிறது.

அற்புதங்கள் நிகழ்த்தும் ஆயுர்வேதம்
ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.170, தொடர்புக்கு: 044 2433 1510

தலைசிறந்த கால்பந்து வீரரும் 2022 கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜெண்டினா வெல்வதற்கு அணித் தலைவராக இருந்து வழிநடத்தியவருமான லயோனெல் மெஸ்ஸியின் வாழ்க்கையையும் விளையாட்டுத் துறை சாதனைகளையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் சறுக்கல்களையும் விவரிக்கும் நூல்.

மெஸ்ஸி: கால்பந்தின் தேவதூதன், முகில்
பயில் பதிப்பகம், சென்னை, விலை: ரூ.66
தொடர்புக்கு: 72000 50073/044 2434 2771

தத்வமஸி (‘நீ அதுவாக இருக்கிறாய்’) என்னும் உபநிடத வாக்கியத்தின் உட்பொருளை விளக்கும் வகையில் ஆதிசங்கரர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய ‘வாக்கியவிருத்தி’க்கு அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தமிழில் உரை எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

தத்வமஸி, மூலமும்-உரையும்: பேரா.க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ், கோவை, விலை: ரூ.150
தொடர்புக்கு: 90956 05546

புனைவெழுத்து, இதழியல், கலை விமர்சனம் என பல துறைகளில் தனித்துவம் மிக்க தடம் பதித்தவரும் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்தவருமான எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையையும் பணிகளையும் அறிமுகப்படுத்தும் நூல்.

அமரர் கல்கி, அனுஷா வெங்கடேஷ்
கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை: ரூ.160
தொடர்புக்கு: 044 4200 9603

கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை, கணித மேதைமை, அரிய பங்களிப்புகள் குறித்து அறிவியலாளர்
த.வி.வெங்கடேஸ்வரன், எழுத்தாளர் ஆயிஷா நடராசன், கணித அறிஞர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு.

கணித மேதை இராமானுஜன்
தொகுப்பாசிரியர்: நா.சு.சிதம்பரம்
நெல்லி பதிப்பகம், விலை: ரூ.150
தொடர்புக்கு: 98402 21753, 97890 79068

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in