Last Updated : 09 Sep, 2017 09:15 AM

 

Published : 09 Sep 2017 09:15 AM
Last Updated : 09 Sep 2017 09:15 AM

நூல் நோக்கு: கரும்பாய் இனிக்கிறது!

ரும்புச் சாகுபடியைத் திட்டமிட்டும் இலகுவாகவும் செய்வது எப்படி என்பதை எளிதாக விளக்கும் நூல் இது. கரும்பு விவசாயத்தில் நூலாசிரியருக்கு உள்ள 45 ஆண்டுகால அனுபவத்தின் தொகுப்பு இந்த நூல். கரும்புத் தோகையை எரித்துச் சூழலை மாசுபடுத்துவதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளை வீணாக எரிக்கிறோம் என்பதை ஆசிரியர் நன்கு உணர்த்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் 43 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றுக்காக 7 லட்சம் ஏக்கரில் கரும்பு அறுவடையாகிறது. 77 லட்சம் டன் தோகைக்கழிவு கிடைக்கிறது. இந்தத் தோகையை மக்கவைத்தால் 40 லட்சம் டன் இயற்கை உரம் கிடைக்கும். ஒரு டன் ரூ. 500 என்று மதிப்பிட்டாலும் இதன் மதிப்பு ரூ.200 கோடி. ஒரு ஏக்கரில் கரும்பு சோகை எரிந்தால் 600 முதல் 700 சென்டிகிரேட் வெப்பம் வெளிப் படுகிறது.

7 லட்சம் ஏக்கர் கரும்பு சோகையையும் எரித்தால் 42 கோடி சென்டிகிரேட் வெப்பம் வெளிப்பட்டு, அது சூழலிலும் வெப்பநிலையிலும் ஏற்படுத்தும் பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்! இப்படியெல்லாம் பல விதங் களிலும் இந்த புத்தகம் நம்மை யோசிக்க வைக்கிறது. ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் இருக்க வேண்டிய, உழுபடைக் கருவியைப் போன்ற வழிகாட்டி நூல் இது.

கரும்புத் தோகையில் கருப்புத் தங்கம்-எஸ். மனோகரன், வள்ளலார் பதிப்பகம், விழுப்புரம், 94436 68346, 90250 29442, விலை ரூ.60, பக்கங்கள் 104. கரும்புச் சாகுபடியைத் திட்டமிட்டும் இலகுவாகவும் செய்வது எப்படி என்பதை எளிதாக விளக்கும் நூல். நாற்பது சுருக்கமான தலைப்புகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x