

நாம் அறிந்த சட்ட வல்லுநர்களின் அறியாத பக்கங்களை இந்த நூல் சொல்கிறது. சட்ட ஆளுமைகள் பற்றி சிரத்தையுடன், ஆதாரங்களுடன் நூலாசிரியர் ஆவணப்படுத்தியுள்ளார். வாசிப்புச் சுவாரசியம் என்பதைத் தாண்டி, தான் தரும் தகவல்களின் அடிப்படையில் ஆளுமைகளின் அரசியல் பங்களிப்பு பற்றிய புரிதலுடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சம். தமிழகச் சட்ட ஆளுமைகள் பற்றிய இந்தக் கட்டுரைகள்வழி தமிழகச் சட்டத் துறை பற்றிய ஒரு வரலாற்றுச் சித்திரத்தையும் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த வகைகளில் இந்நூல் கவனத்துக்குரிய ஒன்று.
தமிழ்நாட்டுச்
சட்ட மேதைகள்
கோமல் அன்பரசன்
இந்து தமிழ்திசை வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 7401296562
அயல்மொழி நூலகம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழலின் சிக்கலான கோட்பாடுகளும், சர்ச்சைக்குரிய கூறுகளும் சாதாரண வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் சார்ந்து சர்வதேச அளவில் இயங்கிவரும் கிருஷ்ணன், முழுமையான ஆய்வுக்குப் பின் இந்நூலை எழுதியிருக்கிறார்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம், அதற்காகப் போராடும் இயக்கங்களின் வரலாறு, அது தொடர்பான சர்வதேச முன்னெடுப்புகள் ஆகியவை குறித்த விரிவான விமர்சனப் பார்வையை இந்நூலின் வழியே அவர் முன்வைக்கிறார். வளர்ச்சி என்பது வெறும் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது; இயற்கையோடு இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்நூல் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக, மாணவர்கள். - ஹுசைன்
ஏ கிரீன் எகானமி
(A Green economy)
என்.ஆர்.கிருஷ்ணன்
நோஷன் பிரஸ் வெளியீடு
விலை: ரூ.499
தொடர்புக்கு: 044 4631 5631