

நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையையும், நோய்களிலிருந்து விடுபடுவதற்கான இயற்கை சிகிச்சை முறைகளையும் விளக்குகிறது இந்நூல்.
நூறு ஆயுசு உங்களுக்கு
மா.தசரதன்
காகிதப்பட்டறை, காரைக்குடி
விலை: ரூ.248
தொடர்புக்கு: 81108 06060
தடுப்பூசி, நுண்ணுயிர்கள், வைரஸ், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பற்றிய புரிதலைத் தரும் நூல். கரோனா வைரஸ், அதற்கான தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான சர்வதேச அரசியல் விவகாரங்களும் பேசப்பட்டுள்ளன.
வாக்சின்: அறிவியலும் - அரசியலும்
அரீட் செந்தில்
வானவில் புத்தகாலயம், சென்னை
விலை: ரூ.155
தொடர்புக்கு: 044-2434 2771/2986 0070/72000 50073
பிராமண குலத்தில் பிறந்த முத்துப்பட்டன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொம்மக்கா, தும்மக்கா சகோதரிகளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு கொல்லப்பட்ட கதையை பழங்காலக் கதைப் பாடல்கள், ஆய்வுக் குறிப்புகள் வழியாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்
பேரா.சு.சண்முகசுந்தரம்
காவ்யா, சென்னை
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044-2372 6882/ 98404 80232
மூத்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘முறிவு’, ‘தறிநாடா’ உள்ளிட்ட தன்னுடைய ஒன்பது நாவல்கள், ‘மதிமுகம்’ சிறுகதை ஆகியவற்றை வைத்து பத்து திரைக்கதைகளைப் படைத்துள்ளார்.
10 திரைக்கதைகள் (இரண்டாம் பாகம்)
சுப்ரபாரதிமணியன்
கனவு பதிப்பகம், திருப்பூர்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 094861 01003
தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானதான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாரின் உரையைப் பின்பற்றி 30 அத்தியாயங்கள் கொண்ட நாவலாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
நாவல் வடிவில் சிலப்பதிகாரம்
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.310
தொடர்புக்கு: 8148066645