நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

மார்க்ஸிய சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் இந்நூலின் மூலம் கவிஞராகவும் தடம் பதித்துள்ளார். அவர் எழுதிய 200 கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஞானக் கோலங்கள் 200
அருணன்
வசந்தம் வெளியீட்டகம், மதுரை
விலை: ரூ.300
தொடர்புக்கு: 93848 13030

திமுக தொடங்கப்பட்ட காலம்தொட்டு அக்கட்சியின் முக்கியமான முழக்கங்களில் ஒன்றாகத் திகழும் மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

மாநில சுயாட்சி
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம், சென்னை
விலை: ரூ.175
தொடர்புக்கு: 044-2650 2086, 9444191256

மலரடியான் எழுதியுள்ள 75 சிறார் பாடல்களின் தொகுப்பு. எளிய மொழியில் சிறந்த கருத்துகளைக் கொண்டுள்ள பாடல்களுடன் அழகான படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

கண்ணே என் கண்மணியே (சிறுவர் பாடல்கள்)
மலரடியான்
லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை
விலை: ரூ.120
தொடர்புக்கு: 98412 36965

கல்வியின் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கல்வியே ஒரு மனிதன் அழிவில்லாத சிறந்த செல்வம் என்னும் வள்ளுவன் வாக்கை உணர்த்த முயன்றிருக்கிறார் நூலாசிரியர்.

ஒரு கிராமத்தின் கதை
எஸ்.பரமசிவம்
எஸ். பதிப்பகம், மதுரை
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9443691633, 9344077153

இயற்கை மீதான கரிசனம் கவிதைகளில் வெளிப்படுகிறது. சொந்த ஊர் பற்றிய ஏக்கம், சக மனிதர்கள் மீது அன்பை வெளிப் படுத்தும் சிந்தனைகள் என கவிதைகளின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன.

வெயில் மேயும் நீர்ப்புலி
சோலைமாயவன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 90955 07547, 9597014283

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in