

ரஷ்ய இலக்கிய மாமேதை ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் 200ஆவது ஆண்டை ஒட்டி ‘கனலி’ இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. நேர்காணல்களும் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி: 200ஆவது ஆண்டு சிறப்பிதழ்
தொகுப்பு: க.விக்னேஸ்வரன்
கனலி பதிப்பகம்
விலை: ரூ.700
தொடர்புக்கு: 90800 43026
விக்டர் ஹ்யூகோ, பாப்லோ நெருதா, கோவிந்தா பிஸ்வாஸ், ரஜினி சாப்ரா உள்ளிட்ட புகழ்பெற்ற கவிஞர்களின் 29 கவிதைகள் இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஏதுமிலி (மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
சந்திரா மனோகரன்
தமிழ்ப் பல்லவி வெளியீடு,
விருத்தாசலம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 04143-238639, 99423 47079
டெல்லிக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த புரிதலை அளிக்கும் பத்துக் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. ஈழத் தமிழர்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
புலம்பெயர் தமிழர்கள்: வாழ்வு - இருப்பு - படைப்பு
பேரா.ச.சீனிவாசன்
பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9911223484, 9911345252
தான் திரைப்படம் பார்த்த வெவ்வேறு திரையரங்குகள் குறித்து நூலாசிரியர் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளும் அவற்றின் கீழ் நண்பர்கள் நிகழ்த்திய உரையாடல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
திரையோடி (அகமும் முகமும்)
ஆ. சேஷ ராஜ சங்கரன்
குமரன் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 004 - 2435 3742, 2431 2559
தமிழ்க் கல்வெட்டுகள், செப்பேடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான விளக்கம், அதன் மூலம் தெரியவரும் அக்கால சமூகச் சூழல் ஆகியவை இந்நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.
சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
எஸ்.கிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம், சென்னை
விலை: ரூ.170
தொடர்புக்கு: 8148066645