

பண்டைக் காலத்தில் சேதுநாடு என்று அழைக்கப் பட்ட பகுதியை பொ.ஆ.1671 முதல் 1710வரை ஆட்சி செய்தவரும் சேதுபதி மன்னர்களிலேயே பெரும் வீரன் என்று புகழப்பட்டவருமான மன்னர் இரண்டாம் ரகுநாத சேதுபதியின் வாழ்க்கை வரலாற்றை சற்று புனைவு கலந்து வரலாற்று நாவல் வடிவில் முன்வைக்கிறது இந்த நூல்.
உரிமை வீரன் சேதுபதி
க.மனோகரன்
செண்பகா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.375
தொடர்புக்கு: 044-24331510
கனடாவில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர் ராதா மனோகர் தனது வலைப் பக்கத்தில் எழுதிய வாழ்வியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு. இயற்கை, பிரபஞ்சம், மனித வாழ்க்கை ஆகியவை தொடர்பான பல கேள்விகளுக்குப் பகுத்தறிவுப் பார்வையுடன் விடை சொல்ல முயன்றிருக்கிறார் நூலாசிரியர்.
வாழ்வியல் சிந்தனைகள்
ராதா மனோகர்
சிபி பதிப்பகம். மதுரை
விலை: ரூ.220
தொடர்புக்கு: 8838211644
தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். நாட்டை அவமதித்துப் பேசிய வாலிபனைக் கொன்ற பழியும் அவர்கள் மீது இருக்கிறது. இத்தகைய கருவை முன்வைத்து தாய்நாட்டுப் பற்றை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்த நாவல்.
தேசமே என் நேசமே
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம், சென்னை
விலை: ரூ.225
தொடர்புக்கு: 8682868415
முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று நூல். இதை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் கலாமுடன் பணியாற்றியவரும் ‘2020 – தொலைநோக்குப் பார்வை’ உள்ளிட்ட நூல்களை கலாமுடன் இணைந்து எழுதியவருமான விஞ்ஞானி ய.சு.ராஜன், அப்துல் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயர் ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
அப்துல்கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை
ய.சு.ராஜன், நசீமா மரைக்காயர்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி
விலை: ரூ.600
தொடர்புக்கு: 04259-236030/40, 9976144451
நன்மொழிப் பதிப்பகம் வெளியிட்டுவரும் ‘வண்ணத்தில் காமிக்ஸ்’ நூல் வரிசையில் ‘திருக்குறள் கதைகள்’ 11ஆவது நூலில் ஆறு குறள்களுக்கான காமிக்ஸ் கதைகள் இடம்பெற்றுள்ளன. ‘ஆத்திச்சூடி கதைகள்’ நூலில் ஔவையாரின் பதினொரு ஆத்திச்சூடி வாசகங்களின் அடிப்படையிலான காமிக்ஸ் கதைகள் இடம்பெற்றுள்ளன.
திருக்குறள் கதைகள் 11,
ஆத்திச்சூடி கதைகள்
பேராசிரியர் ஏ.சோதி
நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி
விலை: ரூ.90 (ஒரு நூலுக்கு)
தொடர்புக்கு: 93454 50749, 99626 95446