

திருக்குறளில் கன்னியாகுமரி மாவட்ட வழக்குச் சொற்களை நூலாசிரியர் புழங்குமொழி உதாரணங்களுடன் ஆராய்ந்து கண்டுபிடித்து இதில் வரிசைப்படுத்தியுள்ளார். உதாரணமாக, நாயைப் பட்டி எனக் குறிப்பிடுவது குமரி மாவட்டத்தில்தான். வள்ளுவமும் அப்படிக் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டுகிறார்.
திருக்குறளில் வட்டார வழக்குச் சொற்கள்
டாக்டர் த.ஜெகதீசன்
கவி ஓவியா பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9840912010
பெரியாருக்கு எதிரான வாதங்களின் பின்னணியை இதில் நூலாசிரியர் தெளிவு படுத்துகிறார். உதாரணமாக, தமிழ்நாடு தமிழருக்கே என்ற தீர்மானத்தை முதலில் முன்மொழிந்தது மறைமலை அடிகள் என்கிற நெடுஞ்செழியனின் கூற்று சரியானது அல்ல என்பதைப் பின்னணியுடன் கொளத்தூர் மணி விளக்கியிருக்கிறார்.
பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்
கொளத்தூர் மணி
நன்செய் பிரசுரம்
விலை: ரூ.40
தொடர்புக்கு: 9566331195
திரைப்படப் பாடல்களில் தமிழ் இலக்கியத்தின் பாதிப்பை நூலாசிரியர் சுவைபடத் தொகுத் துள்ளார். ‘அத்திக்காய் காய்’ என்ற பாடலை எழுத கண்ணதாசனுக்குக் காளமேகப் புலவரின் ‘கரிக்காய் பொரித்தாள்’ என்ற பாடல் முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்கிற ஊகத்தை நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
திரையில் இலக்கிய எதிரொலி
சீ.ப.சீனிவாசன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9940446650
தென்னகத்தை ஆண்ட விஜயநகரப் பேரரசு பற்றிப் புகழும் நூல். நாவலுக்கு உரிய சுவாரசியத்துடன் அந்த வரலாற்றைச் சொல்ல இந்த நூல் முனைப்புக் காட்டுகிறது.
விஜயநகரப் பேரரசு
எஸ்.கிருஷ்ணன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 42009603
தமிழ் நாட்டுப்புறவியல் அகராதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூல் ஏற்கெனவே வெளிவந்த நாஞ்சில், கரிசல், கொங்கு, நடுநாட்டுச் சொல்லகராதிகளின் ஒருங்கிணைந்த தொகுப்புபோல் உள்ளது. மறைந்துவரும் வட்டாரச் சொற்களை இந்த அகராதி நினைவூட்டுகிறது.
தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி
பேரா. சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.800
தொடர்புக்கு: 9840480232