நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

ரத்தம் குறித்து அறிவியல்பூர்வமாகப் பல வகையில் விவரிக்கும் நூல் இது. ரத்தத்தின் அளவு குறைவு என்றால் அதனால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை எளியோரும் அறியும் வண்ணம் டாக்டர் எஸ்.அமுதகுமார் விளக்கியுள்ளார்.

ரத்தம்
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார்
அபிநயா பிரசுரம், விலை: ரூ.100
தொடர்புக்கு: 9791071218

பிரபல மலையாளக் கவி குஞ்ஞுண்ணியின் குறுங்கவிதைகள் போல ஜோ இந்தத் தொகுப்பில் எழுதியுள்ளார். கவிதைப் பொருளை அவர் கொள்ளும் விதம் சுவாரசியம் அளிக்கிறது.

உப்புக் குதிரைகள்
நன்செய் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9566331195

ஓவியர் ஜேகே என்கிற ஜெயகுமாரின் கவிதைகள் இவை. கவிஞர் ரவி சுப்பிரமணியன் இதைப் பாடல்களின் தொகுப்பு என்கிறார்.

அன்று முதல் இன்று வரை
ஜெயகுமார் (JK)
கலைஞன் பதிப்பகம், விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-28340488

கடல் மார்க்கமாக நடக்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை அனுபவத்தின் அடிப்படையில் இதை நூலாசிரியர் நாவலாக எழுதியிருக்கிறார்.

எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்
தோ.சமயமுரளி
பிரதீபா பப்ளிஷர்ஸ்
தொடர்புக்கு: 9585539988

Millions of Jobs - Possible or Not? என்கிற தலைப்பில் A.V.வரதராஜன் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கம். இதில் வேலைவாய்ப்புகள், அதன் சவால்கள் என விரிவான தளத்தில் பேசப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான வேலைகள்
சாத்தியமா இல்லையா?
A.V.வரதராஜன்
ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
தொடர்புக்கு: 89250 61999

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in