Published : 22 Jan 2014 01:05 PM
Last Updated : 22 Jan 2014 01:05 PM

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - த மியூசிக் ஸ்கூல் (தமிழ்)

மேற்கத்திய இசையை எளிதாக கற்றுக்கொள்வதற்கும், மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கும் தமிழில் பாடங்களே இல்லை என்ற குறையைப் போக்க வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செழியனின் ‘த மியூசிக் ஸ்கூல்’

வெளியீடு. எளிய தமிழில் வந்திருக்கும் இந்தப் புத்தகங்களின் மூலம் வீட்டிலிருந்தே மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த இசைப்பாடங்கள் பத்து வயதிலிருந்து, பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு உதவுபவை. 15 ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. 1,700 பக்கங்கள், 200-க்கும் மேற்பட்ட பாடங்கள், 1,000-க்கும் மேற்பட்ட விளக்கப் படங்கள் போன்றவற்றோடு இந்தப் புத்தகத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. டிரினிடி இசைக் கல்லூரியின் தேர்வில் மூன்றாம் நிலையில் எளிதாகத் தேர்ச்சியடையும் வகையிலும் இந்தப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது ‘த மியூசிக் ஸ்கூல்’ நூலின் சிறப்பு.

செழியன் - த மியூசிக் ஸ்கூல் வெளியீடு, விலை: 7000/-

(புத்தகத் திருவிழாவில் சிறப்புத் தள்ளுபடி விலை: 3000 ரூபாய்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x