

இன்டீரியர் லேண்ட்ஸ்கேப்: கிளாசிக்கல் தமிழ் போயம்ஸ்
* ஏ.கே.ராமனுஜம்
சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ.கே.ராமனும் மொழிபெயர்த்த குறுந்தொகைப் பாடல்கள் இவை. சர்வதேச இலக்கியத்தில் தமிழை அறிமுகம் செய்தவர்களில் இவர் குறிப்பிடத்தகுந்தவர்.
ஃபோர் ஹண்டரட் சாங்ஸ் ஆஃப் வார் அண்ட் விஸ்டம்
* ஜார்ஜ் எல்.ஹார்ட்,
ஹேங் ஹெய்வெட்ஸ்
புறநானூறு நூலின் மொழி பெயர்ப்பு இது. அமெரிக்கரும் தமிழ் அறிஞருமான ஹார்ட்டின் மொழிபெயர்ப்பு என்பது இதன் சிறப்பு.
திருக்குறள்
* ஜி.யு.போப்
மதப் பணிக்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த
ஜி.யு.போப் தமிழைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். 1886இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை
* லட்சுமி ஹோம்ஸ்ட்ராம்
நவீனத் தமிழ் ஆக்கங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், இக்காப்பியங்களை வசனமாக மொழிபெயர்த்துள்ளார்.
தொல்காப்பியம்
* பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி
சமஸ்கிருத-தமிழ்ப் பண்டிதரான பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரியின் மொழிபெயர்ப்பு இது. தொல்காப்பியத்தை ஆழ்ந்து கற்று அதை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் மொழிபெயர்த்துள்ளார்.