

இந்திய தேசிய இயக்கம் ‘பரிபூரண சுதந்திரம்’ என கோரிக்கை எழுப்பி எண்ணற்ற போராட்டங்களை நடத்தியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டின் வளத்துக்கும் முன்னேற்றத்துக்கும் ஆதாரமாக இருந்த இந்தியாவை என்றுமே விட்டுவிட விரும்பவில்லை. மிண்டோ-மார்லியிருந்து கிரிப்ஸ் கமிஷன் வரை எண்ணற்ற வாக்குறுதிகளை இந்திய மக்களுக்கு அவ்வப்போது வழங்கியபோதும், உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிப் பீடத்தில் மாறிமாறி அமர்ந்தவர்கள் அனைவருமே இந்தியர்களின் சுயாட்சிக்கான ஏற்பாடுகளை செய்ய விரும்பாமலேயே இருந்தார்கள் என்பதை 1917 முதல் 1947 வரையான 30 ஆண்டு கால அரசு ஆவணங்கள், கடிதப் போக்குவரத்துகள் போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு, இந்தப் பொறுப்பற்ற போக்கின் விளைவே இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தடையாக அமைந்தது என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.
கீப்பிங் த ஜுவல் இன் த க்ரவுன் த பிரிட்டிஷ் பெட்ரயல் ஆஃப் இந்தியா,
வால்டர் ரீட்,
பெங்குவின்/வைகிங். விலை: ரூ. 599