

யாதுமாகி நின்றவள் (சிறுகதைகள்)
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94432 84823
ஈழ எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்களைக் கொடுத்து, அதனடிப்படையில் கதைகளைச் சுவாரசியமாக எழுதித் தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர்.
தழும்பின் மீதான வருடல்
அன்புத் தோழி ஜெயஸ்ரீ
கடல் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 82488 03245
தனக்குத் தோன்றிய கற்பனைகளைத் துணிந்து, எளிய மொழியில் கவிதைகளாக இதில் ஆசிரியர் தொகுத்துள்ளார். பலவிதமான மனநிலைகளில் எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள்.
மெளனம் பேசும் கடல் அலைகள்
தமிழினியன்
மணிவாசகர் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 25361039
வாழ்க்கை அனுபவங்களை இயல்பான கதைகளாகத் தொகுத்துள்ளார். சமூகம் உருவாக்கிய விழுமியங்களால் காதல் எப்படிச் சிதைகிறது என்பதை ஒரு கதையில் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
உலகெங்கும் கலைஞர்: உலகத் தமிழர்களின் புகழஞ்சலிகள்
முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்
சென்னை வளர்ச்சிக் கழகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: sattakadir1992@yahoo.co.in
திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் ஆளுமையை விளக்கும் விதத்தில் உலகத் தமிழர்களின் புகழஞ்சலிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை, கருணாநிதியின் பெயரில் வழங்கப்படும் சமூக நீதிக்கான பன்னாட்டு விருது விழாவுடன் தொடர்புடையவை.
சூரிய விழுதுகள்
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 63820 38168
இந்தக் கவிதைகளில் ஆன்மிகத் தேடலை அறிய முடிகிறது. மனதுக்குள் குடியிருக்கும் இறைவனைத் தேடியுள்ள பயணமாகத் தன் கவிதைகளை ஆசிரியர் இதில் எழுதியுள்ளார்.