

சைவம் வளர்த்த தமிழ்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன் சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.185
தொடர்புக்கு: 044 26602086
சைவ சமய எழுச்சியால் தமிழ் அடைந்த வளர்ச்சி பற்றி இந்நூலில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். பாம்பன் சுவாமிகள், குறிஞ்சிக் கபிலர், நா.கதிரைவேற்பிள்ளை போன்ற தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தென்னகம் தந்த இஸ்லாமிய ஜோதி ஷாதலி ஹள்ரத்
செ.திவான்
ரெகான் - ரய்யா பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 90803 30200
திருநெல்வேலியில் வாழ்ந்த ஷாதலி ஹள்ரத் குறித்த வரலாற்றை செ.திவான் திறம்பட எழுதியிருக்கிறார். அவரது தந்தையார் குறித்தும் இதில் சொல்லியிருக்கிறார்.
சீவக சிந்தாமணி மூலம் உரையும்
கரு.முத்தய்யா
கோவிலூர் மடாலயம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 9840358301
ஐம்பெரும் காப்பியங்களில் மூன்றாவதாகக் கருதப்படும் சீவக சிந்தாமணி காப்பியம் குறித்த தெளிவுரை நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. பேராசிரியர் கரு.முத்தய்யா இதை எழுதியுள்ளார்.
வேருக்கு நீர்
ராஜம் கிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840358301
தமிழ்ப் பெண் முன்னோடி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ‘வேருக்கு நீர்’ நாவலின்
மறுபதிப்பு இது.
புதிர்வழி அரண்மனை(கள்)
ராமசாமி மாரப்பன்
இளங்கோவடிகள் இண்டெலக்சுவல்’ஸ்
விலை: ரூ.900
தொடர்புக்கு: 9600797655
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றிய புத்தகம் இது. அவரது ‘யுலிஸஸ்’, ‘டப்ளின் நகரத்தார்’ ஆகிய நாவல்கள் உட்பட அவரது எழுத்துகளைக் குறித்தும் இந்நூல் பேசுகிறது.