

தமிழில் ‘அறைக்கலன்’ எனும் சொல்லை தான் உருவாக்கியதாக பேட்டி ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லி இருந்தார். அது தமிழ் படைப்பாளர்கள், வாசகர்கள் மத்தியில் பெருத்த விவாதமாகி உள்ளது. இந்தச் சூழலில் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவரான சுப்ரமணிய பாரதியார் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த சொல் அகராதி (அவர் கைப்பட எழுதியது) உள்ளது. அதை சற்றே பார்ப்போம்...
கவிதை, கட்டுரை போன்ற படைப்புகளை உருவாக்கியவர் பாரதி. விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளராக இயங்கியவர். தமிழ், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவர். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என தாய்மொழி தமிழைப் போற்றுபவர்.
ஆங்கில மொழியிலும் சில கவிதைகள் மற்றும் கட்டுரைகளை பாரதி எழுதி உள்ளார். அது தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது. அவர் தன் பணிக்காக கைப்பட ஆங்கிலந்தில் இருந்து தமிழில் சில சொற்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றில் சில இங்கே...
இதனை பிரத்யேக நோட்டுப் புத்தகம் ஒன்றில் ஆங்கில அகர வரிசையில் பாரதி எழுதி வைத்துள்ளதாக தகவல். அது இப்போது புதுச்சேரியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் சில பக்கங்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சொற்கள் அதில் இருந்து எடுத்தவை.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பதைப் போல கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஏதும் பயன்பாட்டில் இல்லை. ஆனாலும், தனது மொழிப்புலமையை பயன்படுத்தி இந்த பணியை பாரதி மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.