Published : 29 Oct 2022 06:53 AM
Last Updated : 29 Oct 2022 06:53 AM

நூல் வெளி | திண்ணை: வண்ணநிலவனின் படைப்புலகு

எழுத்தாளர் வண்ணநிலவனின் படைப்புலகு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கத்தில் இன்று (அக்டோபர், 29) நடைபெறவுள்ளது. காலை 10:00 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில் சுகுமாரன், என்.ஸ்ரீராம், சுரேஷ் பிரதீப், தி.பரமேஸ்வரி, கார்த்திக் பாலசுப்பிரமணியன், ரவி சுப்பிரமணியன், அரி சங்கர், சுனில் கிருஷ்ணன், சித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.

கு.அழகிரிசாமி கூட்டம்

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக மோக்லி பதிப்பகம் இன்று (அக்டோபர் 29) மயிலாப்பூர், வெங்கடாசலம் தெரு, நிவேதனம் அரங்கில் மாலை 5 மணி அளவில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், பவா செல்லதுரை, சுனில் கிருஷ்ணன், லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்வில் கு.அழகிரிசாமியின் மகனும் ஆவணப்பட இயக்குநருமான சாரங்கன் இயக்கிய கு.அழகிரிசாமி ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ வெளியீடு: எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நாவல் வெளியீட்டு விழா இன்று (அக்டோபர், 29) மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி கவிக்கோ அரங்கத்தில் காலை 10:00 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், ரமேஷ் வைத்யா, ஜா.தீபா ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x