

லத்தீன் அமெரிக்கக் கவிஞர் அலெயேந்திரா பிஸார்நிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. இத்தொகுப்பில் கவிதைகள் மட்டுமல்லாது, அவருடைய எழுத்துகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பாளர் வாசகர்களுக்குத் தந்துள்ளார்.
யாரோவொருவர் அங்கே நடுங்கிக்கொண்டிருக்கிறார்
அலெயேந்திரா பிஸார்நிக் (மொ.ர்.: சமயவேல்)
வெளியீடு: தமிழ்வெளி
விலை: ரூ.280
தொடர்புக்கு: 9094005600
கா.ரபீக் ராஜா இதில் பல தரப்பட்ட வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி யுள்ளார். நடைமேடைவாசிகள், சிறைக்குச் சென்று திரும்பியவர், மூன்றாம் பாலினத்தவர் எனப் பல கதாபாத்திரங்கள் வழி எளிய கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
ஏதேனும் ஒரு வரிசையில்
நின்றவனின் கதைகள்
கா.ரபீக் ராஜா
வெளியீடு: இக்றா பப்ளிகேஷன்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 8220658318
தமிழர்கள்மீது நடைபெற்ற படையெடுப்புகள் குறித்தும் அதனால் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. நூலாசிரியர் முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் என்பது கவனம் கொள்ளத்தக்கது.
தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
க.ப.அறவாணன்
வெளியீடு: தமிழ்க் கோட்டம்
விலை: ரூ.300,
தொடர்புக்கு: 9597717485
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு நூலுக்கான தெளிவுரை இந்நூல். அருஞ்சொற்களுடன் இந்த அறநூலுக்கு நீ.இரவிச்சந்திரன் உரை வழங்கியுள்ளார்.
பதினெண்
கீழ்க்கணக்கு பழமொழி
நானூறு உரையுடன்
தமிழாசிரியர் நீ.இரவிச்சந்திரன்
வெளியீடு: கலாஷேத்திரா
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9840358301
மனிதகுலத்துக்கும் கடவுளுக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட ஒருவரின் வாழ்வு பற்றியது இது. உலக அமைதிக்கான ஓர் ஒட்டுமொத்தப் பார்வை தேவைப்படும் நேரத்தில் இந்நூல் வெளிவந்திருக்கிறது.
அமைதியின் அன்னை
ஹாக் ஜா ஹான் மூன்
தமிழில்: சந்தியா நடராஜன்
சந்தியா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 083
விலை: ரூ.500,
தொடர்புக்கு: 94447 15315