நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்

நல்வரவு: தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
Updated on
2 min read

அம்பேத்கர் தென்னிந்தியாவுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது அவர் சந்தித்த மனிதர்கள், அளித்த பேட்டிகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் நூல் இது.

தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
பேரா. க.ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கர்
கலை இலக்கியச் சங்கம்,
சென்னை 600 040
விலை: ரூ.350, தொடர்புக்கு: 9884744460

பெரியார், அண்ணாவுக்குப் பின்னர் மக்களைப் பேச்சால் வசீகரித்த தலைவர் மு.கருணாநிதி. அவரின் பேச்சாற்றலில் மிகுந்திருக்கும் நயமும் தெளிவும் நாவன்மையும் நகைச்சுவையும் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் சொல்லாடல் கலை
மன்னை சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 049
விலை: ரூ.35, தொடர்புக்கு: 94440 47790

வடலிவிளை செம்புலிங்கம் எனும் மாவீரனின் வரலாற்றை இந்நூலில் நமக்கு மண்மணத்தோடு தாமரை செந்தூர்பாண்டி அளித்துள்ளார்.

வடலிவிளை செம்புலிங்கம்
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்,
காஞ்சிபுரம் - 601 301
விலை: ரூ.320,
தொடர்புக்கு: 9551648732

தமிழர் சமயம், வரலாறு, பண்பாடு, அரசியல், பார்ப்பனியம், பெரியாரியம், தத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்நூல் விவாதிக்கிறது. முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிகழ்வுகளையும், பேசப்படாத பல உரையாடல்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது.

சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல, தொ.பரமசிவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை - 600 050
விலை: ரூ.270, தொடர்புக்கு: 044 2625 1968

நம் வெளியீடு

நூல் வழி துலங்கும் பன்முகம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மிக வலுவாகக் கட்டமைத்தவர் அம்பேத்கர். 75 ஆண்டுக் கால இந்திய சுதந்திர வரலாற்றில் போற்றப்படத்தக்க ஆளுமை அவர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து வெளியான கட்டுரைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அவரின் பன்முகத்தை இந்நூலின் கட்டுரைகள் பறைசாற்றுகின்றன.

‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’
வெளியீடு:
இந்து தமிழ் திசை
தொடர்புக்கு:
7401296562
விலை ரூ.220

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in