

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது மொத்த எழுத்துகளையும் தொகுத்து 6,500 பக்கங்களில் 9 தொகுதிகளாக அன்னம் பதிப்பகம் வெளியிடவுள்ளது. அச்சுப் பணியின்போது விலை அறிவிக்கப்படும் என அன்னம் செய்திக் குறிப்பு சொல்கிறது. மேலதிகத் தொடர்புக்கு: 75983 06030, 73392 79026
அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா. விருது
கோயம்புத்தூர் விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருது கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு செப். 16
அன்று நடைபெற்ற இணையவழி நிகழ்வில் வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இலக்கிய நிகழ்ச்சிகள்
எழுத்தாளர் கெளதம சித்தார்த்தனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருநாள் நிகழ்வும் புத்தக வெளியீடும் இன்று (செப்டம்பர் 17)
பவானி அருகில் காளிங்கராயன்பாளையத்தில் நியூ டெக் எஜுகேசன் சென்டரில் நடைபெறவுள்ளது.
வாசகசாலை அமைப்பு ‘எழுத்தாளர் பெரியார்' என்ற தலைப்பில் இன்று (செப்டம்பர் 17) முழுநாள் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. பேராசிரியர் வீ.அரசு, தோழர் மருதையன், ராஜீவ் காந்தி, மதிவதனி ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்வு அன்பகம், தேனாம்பேட்டை முகவரியில் காலை 09.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை நடைபெறவுள்ளது.