நல்வரவு: திருக்குறள் நாவலர் உரை

நல்வரவு: திருக்குறள் நாவலர் உரை
Updated on
2 min read

நாவலர் நெடுஞ்செழியன், தமிழ்ச் சமூகம் அறிந்த பகுத்தறிவாளர். அவரது பகுத்தறிவுச் சிந்தனைக்கு ஒரு சான்று அவர் எழுதிய இந்தத் திருக்குறள் தெளிவுரை எனத் திடமாக முன்வைக்கலாம்.

திருக்குறள் நாவலர் உரை
இரா.நெடுஞ்செழியன், வெளியீடு: நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி,
விலை: ரூ.50, தொடர்புக்கு: 9566331195

மன ஓட்டங்களைப் பல்வேறு விதங்களில் ஆராயும் நூல் இது. அதன் மூலம் மனத்தைப் பற்றிய ஒரு புரிதலை இந்நூல் உருவாக்க முயல்கிறது.

மனதோடு ஒரு சிட்டிங்
சோம.வள்ளியப்பன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை: ரூ.175
தொடர்புக்கு: 044-42009603

பாவேந்தர் பாரதிதாசனின் ஆத்திசூடி அவருக்கே உரித்தான புதிய சிந்தனையில் எழுதப்பட்டது. அவரது ஆத்திசூடியைச் சிறுவர் கதைவழியாக இதில் நூலாசிரியர் நினைவூட்டுகிறார்.

சிறார் நலம் தேடு, மலரடியான்,
வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை, விலை: ரூ.150,
தொடர்புக்கு: 9841236965

தீராத வேதனையைச் சொல்வதற்கான உவமையாகத் தலைவலி என்னும் சொல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதன் காரண காரியங்களையும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் எளிமையாக விளக்குகிறது இந்நூல்.

தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
டாக்டர் ஜெ.பாஸ்கரன், வெளியீடு: சுவாசம்
விலை: ரூ.130, தொடர்புக்கு: 8148066645

வேங்கடாசல மஹாத்மியம், பிரம்மாண்ட புராணம், வாமன புராணம், மார்கண்டேய புராணம் முதலான பல புராணங்களைக் கொண்டு வருந்தியுணர வேண்டியவற்றை எளிய தமிழில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.

ஸ்ரீ வேங்கடேச புராணம்
நாகர்கோவில் கிருஷ்ணன்
வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை
விலை: ரூ.175, தொடர்புக்கு: 9840226661

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in