

பகவத் கீதைக்கு எழுதப்பட்டுள்ள விளக்க உரைகளை அத்வைத நெறிப்படி விளங்கிக்கொள்ள உதவும் நூல். பகவத் கீதையின் உரைகளைச் சரியாக விளங்கிக்கொள்ளச் செய்வதே இந்த நூலின் நோக்கம் என்கிறார் நூலாசிரியர்.
கீதா ஸாரம்: ஸ்ரீமத்
பகவத் கீதையின் கருத்துப் பிழிவு,
பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், கோவை, விலை : ரூ.600, தொடர்புக்கு: 90956 05546
மகாகவி பாரதியார் தன் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதிய, ‘சின்ன சங்கரன் கதை’ என்னும் நகைச்சுவைக் கதை முற்றுப்பெறாமல் ஏழெட்டு அத்தியாங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதில் தென்காசி தங்கப்பாண்டியனின் சொந்தக் கற்பனையில் மேலும் சில புதிய பகுதிகளைச் சேர்த்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
மஹாகவி பாரதியாரின் சின்ன சங்கரன் கதை ,ஆசிரியர் : மஹாகவி பாரதியார்
இடைச் செருகல் : தென்காசி தங்கப்பாண்டியன், கதிர்காந்தம் பிரசுரம், செங்கோட்டை, தென்காசி மாவட்டம், விலை : ரூ.120
தொடர்புக்கு : 94863 33532
அறிவியல், அறிவியல் புனைகதை. சிறார், கல்வி எனப் பல தளங்களில் தொடர்ந்து எழுதிவரும் ஆயிஷா இரா.நடராசனின் அறிவியல் மிகைப்புனைவுக் கதை இது. தன் நண்பனைக் காப்பாற்றுவதற்காக பை (ᴫ) உலகத்தில் சிக்கிக்கொள்ளும் சிறுமி மின்மினியின் கதை. கணித சூத்திரங்களும் கணித மேதைகள் பற்றிய குறிப்புகளும் இதில் நிரம்பியிருக்கின்றன.
மின்மினி: ᴫ உலகத்தின் கதை
ஆயிஷா இரா.நடராசன், இளையோர் இலக்கியம்
(பாரதி புத்தகாலயத்தின் அங்கம்), விலை : ரூ.80
தொடர்புக்கு : 044 2433 2924
சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் பெ.ஜெயா, பெண்களின் முன்னேற்றத்துக்குத் திராவிட இயக்கமும் பெரியாரும் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்திருக்கிறார்.
திராவிட இயக்கமும் பெண்கள் முன்னேற்றமும்
பெ.ஜெயா, புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை
விலை : ரூ.200, தொடர்புக்கு : 97898 43372
திருநெல்வேலி சதகத்துல்லா அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் செளந்தர மகாதேவன், தான் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி நகரம், அந்த நகரத்தின் வாழ்க்கை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
திருநெல்வேலி நினைவுகள்
செளந்தர மகாதேவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ.200, தொடர்புக்கு : 044 2625 1968,
044 2625 8410